திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj

டான்ஸ் மாஸ்டர் ஆக மாறிய சாய் பல்லவி...

சில ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில்  வெளியான பிரேமம் என்ற படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி.  அதன்பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே என்ற படத்தில் நடித்தார். அதன்பின் தனுஷுடன் மாரி – 2 படத்தில் நடித்து அவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடி எல்லோரையும் கவர்ந்தார்.

இந்நிலையில் சாய் பல்லவி ஒரு படத்தில்  ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் மாஸ்டர் ஆக உள்ளா என்ற தகவல்கள் வெளியாகிறது.

லவ் ஸ்டோரி என்ற படத்தில் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கிவரும் லவ் ஸ்டோரில் என்ற படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து வரும் சாய் பல்லவி அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு பாடலுக்கு நடனம் அமைத்து தரவுள்ளார் என்று தகவல் வெளியாகிறது.