திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (17:17 IST)

சப்ப காரணத்திற்காக... சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் இவர் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என நிராகரித்துள்ளது. இந்த நிராகரிப்புக்கு அவர் கூறும் காரணம் சிறுபிள்ளைத்தனமாகவும் உள்ளது. 
 
மகரிஷி படத்தை அடுத்து மகேஷ் பாபு நடிக்கவிருந்த மகேஷ் 26 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் கேட்டார்களாம். சாய் பல்லவியோ நடிக்க மறுத்துவிட்டாராம்.
 
மகேஷ் பாபுவின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் கலாய்த்ததால் நடிக்க மறுத்துவிட்டாராம் சாய் பல்லவி. நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டாய் என சாய் பல்லவிக்காக அவரடு ரசிகர்கள் வருந்துகின்றனராம்.