புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (14:50 IST)

டோலிவுட்டில் கால்பதித்த டிடி!

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. செல்லமாக டிடி என்றழைக்கப்படும் இவர்ம் சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாது நளதமயந்தி, பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் என வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.
 

 
விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகள், பேட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகளை டிடி தொகுத்து வழங்கி வருகிறார். பேசத் தயங்கும் பிரபலங்கள், எப்போதுமே லைம் லைட்டில் இருக்கும் செலிபிரட்டிகளிடம் சாமானியன் கேட்க விரும்பும் கேள்விகள் என மக்களின் பல்ஸ் பிடித்து இன்டர்வியூ செய்வதில் இவர் கில்லாடி.
 
இந்தநிலையில் தெலுங்கின் முன்னணி இயக்குநர் பூரி ஜெகந்நாத்தின் மகன் ஆகாஷ் ஜெகந்நாத் நடிக்கும் ரொமாண்டிக் படம் ஒன்றில் டிடி நடிக்கிறார். கோவாவில் நடைபெற்ற முதல் ஷெட்யூலை முடித்துள்ள டிடி, இதற்காக படக்குழுவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அனில் படூரி இயக்கும் இந்தப் படத்தில் டிடிக்கு வெயிட்டான ரோல் கொடுத்திருக்கிறார்கள். மேலும், இந்தப் படத்தில் சார்மி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.