1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (16:07 IST)

ரஜினி உங்களுக்கு புரிய வைப்பார் - ரஞ்சித்துடன் மோதும் எஸ்.வி.சேகர்

நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கும், இயக்குனர் ரஞ்சித்திற்கும் இடையே சாதி குறித்த கருத்து மோதல் டிவிட்டரில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


 

 
சமீபத்தில் இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தபோது அமீர் பேச்சுக்கு ரஞ்சித் மிக ஆக்ரோஷமாக பதிலளித்தார்.
 
இதுகுறித்து கருத்து கூறியுள்ள நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், "தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித்." தன் ஜாதியை பெருமையாக சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்' என ஒரு டிவிட் போட்டிருந்தார். 
 
அதற்கு பதில் கூறிய இயக்குனர் ரஞ்சித், 'தலித் என்பது சாதியல்ல, ஆரியம்-சாதியம் ஒழிக்கும் விடுதலைக்கருத்தியல்' என்று கூறினார். இருவரது கருத்துக்களுக்கும் லைக்குகளும் ஷேர்களும் குவிந்து வருகின்றன.
 
இந்நிலையில், ரஞ்சித்தின் கருத்திற்கு பதிலளித்துள்ள எஸ்.வி.சேகர் “வெற்றி வேகம் தங்களின் பதில். வயதும் அனுபவமும் கூடக்கூட தெளிவு பெறுவீர்கள்.என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார்” எனக் கூறியுள்ளார்.
 
இதையடுத்து, ரஞ்சித்தின் ஆதரவாளர்கள், எஸ்.வி.சேகருடன் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.