பிரசவ வலியை தாங்க முடியாமல்; சீன பெண் தற்கொலை!!
சீனாவில் பிரசவ வலியை தாங்கிக் கொள்ள முடியாமல், ஜன்னல் வழியே குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவத்திற்காக பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குழந்தையின் தலை பெரிதாக இருந்த காரணத்தால், சுகப் பிரசவத்திற்கு வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய, அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் கையெழுத்து பெறப்பட்டது. ஆனால், அந்த பெண்ணின் கணவர் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனால் வேறு வழியின்றி சுகப்பிரசவத்திற்காக அப்பெண் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பிரசவ வலியை தாங்க முடியாத பெண், ஜன்னல் வழியே வெளியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதில் அவருடைய பெண் குழந்தையும் உயிரிழந்துவிட்டது. அந்த பெண்ணின் கணவர், தன் மனைவி மிகவும் தைரியமானவள். இப்படி ஒரு முடிவை எடுப்பாள் என நினைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.