செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 11 செப்டம்பர் 2017 (15:47 IST)

பிக்பாஸ் வீட்டில் 6 பிரபலங்களிடையே நிலவும் கடுமையான போட்டி - ப்ரொமோ

பிக்பாஸ் வீட்டில் இருந்து வாரம் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும். இந்த வாரம் ஹரிஷ் கல்யாண், பிந்து மாதவி, சுஜா  வருணி ஆகியோர் எலிமினேஷன் பட்டியலில் இருந்தனர். ஆனால் இந்த வாரம் யாரும் எலிமினேட் ஆகவில்லை. மாறாக வந்த விருந்தாளிகளான சக்தி, ஆர்த்தி, ஜூலி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 
ஒரே நேரத்தில் 4 பேர் வெளியேற்றப்பட்டதை போட்டியாளர்களால் நம்பவும் முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை.  மேலும் சுஜா வெளியேற்றப்படமால் தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு  தெரியாது. இதனால் பத்தாக இருந்த போட்டியாளர்களில் தற்போது 6 ஆக உள்ளது.
 
இந்த வார எலிமினேஷன் பட்டியலில் யார்? மற்றும் இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது வந்துள்ள ப்ரொமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே போட்டி வலிமை பெற்றுள்ளது. இதனால் யாரை எலிமினேஷக்கு நாமினேட் செய்வது என காரணத்தோடு தெரிவிக்க வேண்டும். அதன்படி ஒவ்வொருவராக யார்  என்பதனை பிக்பாஸிடம் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் இந்த வார நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது.