வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (16:02 IST)

மனோரமா இடத்தில் கோவை சரளா

பேராண்டி படத்தில் மனோரமா நடிக்க இருந்த பாட்டி வேடத்தில் தற்போது கோவை சரளா நடிக்க உள்ளார்.


 

 
நடிகை மனோரமா இறப்பதற்கு முன் பேராண்டி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்திற்காக மனோரமா ஒரு பாடலையும் பாடியுள்ளார். ஆனால் படப்பிடிப்பு நடக்க இருந்தபோது மனோரமா இறந்துவிட்டார். இதனால் படம் அப்படியே நின்றுபோனது.
 
இந்நிலையில் அந்த படத்தில் மனோரமா நடிக்க இருந்த வேடத்தில் தற்போது கோவை சரளா நடிக்க உள்ளார். நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த கோவை சரளா பின் குணசித்ர வேடத்தில் நடிக்க தொடங்கினார். கோவை சரளா, மனோரமா பாணியை பின்பற்றி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு பேராண்டி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 
 
மேலும் மனோரமா பாடிய பாடல் தற்போது கோவை சரளா நடிக்க உள்ள பேராண்டி படத்தில் இடம்பெறுகிறது என தெரிவித்துள்ளனர்.