கே.ஜி.எப் 2 -விற்கு போட்டியாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் அப்டேட்ஸ் சொன்ன ராஜமௌலி!

Last Updated: வியாழன், 14 மார்ச் 2019 (15:10 IST)
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட படமான பாகுபலி சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனையை படைத்தது. பாகுபலியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  இயக்குனர் ராஜமௌலி தற்போது  ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் என தெலுங்கு சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களை வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தை அறிவித்தார். இருந்தாலும் படம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் விவரத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ராஜமௌலி, இந்த படத்தில் இந்தி நடிகர்களான ஆலியா பட், கஜோல் கணவர் நடிகர் அஜய் தேவ்கன், ஹாலிவுட் நடிகை டெய்ஸி எட்கர்-ஜோன்ஸ் போன்றவர்கள் போன்றவர்கள் நடிக்கின்றனர். 


 
நேற்று தான் கன்னடத்தில் வெளியாகி மெகா ஹிட் அடைந்த கேஜிஎப்  திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பூஜை துவங்கி இருந்தது. இந்த நிலையில் ராஜமௌலி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :