செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:49 IST)

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் அடுத்த அவதாரம்…. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதிய முயற்சி!

தமிழ் சினிமாவில் சிறப்பாக செயல்படும் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ் ஆர் பிரபு புதிதாக காஸ்ட்டிங் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளாராம்.

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரின் நெருங்கிய உறவினராகவும், டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எஸ் ஆர் பிரபு தமிழ் சினிமாவில் சிறப்பாக செயல்படும் தயாரிப்பாளர்களில் ஒருவர். இந்நிலையில் அவர் இப்போது ஹாலிவுட் மற்றும் பாலிவுட் ஆகிய படவுலகங்களில் இருப்பது போல காஸ்ட்டிங் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளாராம்.

இந்த நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்யும் சீனியர் நடிகர்கள் முதல் புதுமுகங்கள் வரை அனைவருக்கும் நிறுவனத்தின் மூலம் சம்பளம் பேசப்பட்டு வாய்ப்புகள் வாங்கித் தரப்படுமாம். ஆனால் சம்மந்தப்பட்ட பட தயாரிப்பாளர்களிடம் தங்கள் கமிஷனை சேர்த்து அவர்கள் பெற்றுக்கொள்வார் என சொல்லப்படுகிறது.