1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 ஜனவரி 2021 (18:20 IST)

100% இருக்கை அனுமதி: இருப்பினும் ஓடிடி பக்கம் செல்வது ஏன்?

திரையரங்குகளில் நாளை முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதித்து உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 100 சதவீத இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தும் ஓடிடி பக்கமே ஒரு சில தயாரிப்பாளர்கள் சென்று கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
இதற்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறும் காரணம் என்னவெனில் ஓடிடியில் திரைப்படத்தை விட்டால் மொத்த பணமும் ஒரே ஒரே தொகையாக கைக்கு வந்து விடுகிறது என்றும் ஆனால் விநியோகஸ்தர் மற்றும் திரையரங்குகளுக்கு விற்பனை செய்தால் பணம் வருவது தாமதம் ஆகிறது என்றும் அது மட்டுமன்றி சரியான கணக்குகளையும் திரையரங்கு உரிமையாளர்கள் காண்பிப்பது இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர் 
 
எனவே லாபமோ நஷ்டமோ ஒரே தொகையாக மொத்தமாக பணம் கிடைப்பதால் ஓடிடி பக்கம் செல்வதாகவும் ஒரு சில தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர் மேலும் ஓடிடியின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்றும் திரையரங்குகளின் பரிணாம வளர்ச்சிதான் ஓடிடி என்றும் சில தயாரிப்பாளர்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது