திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:01 IST)

எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த படம் – பேரே மாஸா இருக்கே!

இயற்கை, ஈ மற்றும் பேராண்மை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த ஒரு படம் சில காரணங்களால் ட்ராப் ஆகியுள்ளது.

இயற்கை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இயக்குனர் எஸ் பி ஜனநாதன், வரிசையாக ஈ மற்றும் பேராண்மை போன்ற பொருளாதார விளிம்பு நிலை மக்களை பற்றி படம் எடுத்து அவற்றை வசூல் ரீதியாகவும் வெற்றி பெற வைத்தவர். பேராண்மை படம் வந்த சமயம் ரஜினிகாந்த் தனக்கு ஏதாவது கதை சொல்லுங்கள் எனக் கேட்க பக்கிரி என்ற பெயரில் ஒரு கதையை சொல்லியுள்ளார்.

அந்த கதை ரஜினிக்கும் பிடித்துள்ளது. ஆனால் ஏனோ சில காரணங்களால் அந்த படத்தை இயக்க முடியவில்லை என எஸ் பி ஜனநாதன் ஒரு நேர்காணலில் சொல்லியுள்ளார்.