திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (12:40 IST)

குருவே சரணம்: ரஜினிகாந்த் பாதத்தை டுவிட்டரில் பதிவு செய்த பிரபல நடிகர்!

குருவே சரணம் என குறிப்பிட்டு ரஜினிகாந்த் பாதத்திற்கு வணக்கம் செலுத்திய ராகவா லாரன்ஸால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படம் ரிலீஸானது. இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதியுடன் அவர் திரையுலகில் வந்து 45 ஆண்டுகள் ஆகின்றன 
 
இதனையடுத்து தமிழ்த் திரையுலகமே ரஜினியின் 45 ஆண்டு கால நிறைவு விழாவை கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்தின் பாதம் கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது
 
திரையுலகம் ரஜினியின் 45 ஆண்டுகால சினிமா பயணத்தை வேற லெவலில் கொண்டாடி வருகிறது. நான் மிகவும் மகிழ்ச்சியோடும் பெருமையோடும் ரஜினி அவர்களை பார்க்கின்றேன். நாம் ஒவ்வொருவருக்கும் அவரது எளிமை மற்றும் கடின உழைப்பு கற்று கொடுப்பதால் அவர் தான் நம் குரு. அவருடைய உடல்நலம் நன்றாக இருக்க நான் ராகவேந்திரா சுவாமியை வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.