புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (12:20 IST)

நான் மட்டும் அதை செய்யாவிட்டால் சினிமாவில் இருக்கவே தகுதி இல்லை… எஸ்ஜே சூர்யா டிவீட்!

ஜெய் பீம் படத்தைப் பார்த்துள்ள இயக்குனர் எஸ் ஜே சூர்யா அந்த படத்தைப் பாராட்டி டிவீட் செய்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தற்போது வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் குவித்தது.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா படத்தைப் பார்த்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘ஜெய் பீம் பார்த்துவிட்டேன். நீதிபதி சந்துருவை இயக்குனரும் சூர்யாவும் பெருமைப் படுத்தியுள்ளனர். படத்தைப் பார்த்துவிட்டு அதைப் பாராட்டி நான் டிவீட் செய்யாவிட்டால் சினிமாவில் இருக்கவே தகுதியில்லனாதவாகி விடுவேன்’ என கூறியுள்ளார்.