1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 நவம்பர் 2021 (15:57 IST)

எழுந்து நின்று தலைவணங்குகிறேன்… ஜெய் பீம் குறித்து மாதவன் புகழ்ச்சி!

ஜெய் பீம் படத்தைப் பாராட்டி நடிகர் மாதவன் தன்னுடைய சமூகவலைதளத்தில் புகழ்ந்து பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தற்போது வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் குவித்தது.

இந்த படத்தைப் பார்த்துள்ள நடிகர் மாதவன் இப்போது தன்னுடைய பாரட்டுகளையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார். அதில் ‘சில படங்கள் நம்மை சுற்றி நடப்பது குறித்து,  நமது கோபத்தைத் தூண்டும். ஜெய் பீம் அப்படி ஒரு படம். சகோதரர் சூர்யா அவர்களே தலைவணங்குகிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க திரைப்படத்தை உருவாக்க ஒவ்வொரு துறைக்கும் மிக அற்புதமான முறையில் பொருத்தமான ஆட்களை தேர்வு செய்துள்ளீர்கள்’ எனக் கூறியுள்ளார்.