ஜெய் பீம் படத்தின் காட்சியில் மாற்றம் … பின்னணி என்ன?
சூர்யா மற்றும் பலர் நடித்துள்ள ஜெய் பீம் படம் பாராட்டுகளைக் குவித்து வரும் நிலையில் ஒரு காட்சி மட்டும் சர்ச்சைகளை சந்தித்தது.
நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தற்போது வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் குவித்தது.
ஆனால் முக்கியமான ஒரு காட்சியில் கொடூரமான வில்லனாக நடித்துள்ள குருமூர்த்தி கதாபாத்திரத்தின் பின்னணியில் வன்னியர் சங்க காலண்டர் இடம்பெற்றிருந்தது. இது சம்மந்தமாக அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் குற்றச்சாட்டை எழுப்பினர். இதையடுத்து படக்குழுவினர் அது தவறுதலாக நடந்த ஒன்று எனக் கூறி இப்போது அந்த காலண்டர் காட்சியை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.