புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (12:52 IST)

சீனாவில் களமிறங்கும் அஜித் – நேர்கொண்ட பார்வை அப்டேட் !

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சீனாவில் திரையிடுவதற்கான வேலைகளில் படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது.

அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு  வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை அடுத்து அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச் வினோத்துக்கே வாய்ப்பு அளித்துள்ளார்.

இந்தப்படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் களம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறதாம். சமூகப் போராளி ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை ஹெச் வினோத் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தப்படத்தைத் தயாரித்துள்ள போனி கபூர் சீனாவில் இந்தப்படத்தை ரிலிஸ் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். சமீபத்தில் இவரது தயாரிப்பான மாம் படம் சீனாவில் வெளியாகி வெற்றிகரமாக 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதால் நேர்கொண்ட பார்வை படத்தையும் அங்கு ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதனால் நவம்பர் அல்லது டிசம்பரில் நேர்கொண்ட பஅர்வை சீனாவில் ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.