பொன்னியின் செல்வன்: தமிழகத்தில் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் படம்!
தமிழகத்தில் மட்டும் முதல் முறையாக ரூபாய் 200 கோடி வசூல் செய்த படம் என்ற பெருமையை சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் 30-ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 500 கோடி வசூலித்ததாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த படம் ரூ200 கோடி வசூல் செய்ததாகவும் 200 கோடி வசூல் செய்த ஒரே தமிழ்ப்படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது
இதற்கு முன்னர் பாகுபலி திரைப்படம் 150 கோடி வசூல் செய்து அதிகபட்சமாக வசூல் செய்த படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக முதல் முறையாக ரஜினியின் சிவாஜி படம் ரூ.50 கோடி வசூல் செய்தது என்பதும் ரஜினியின் எந்திரன் திரைப்படம் முதல் முறையாக 100 கோடி தமிழகத்தில் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran