திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (16:26 IST)

உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல்… மைல்கல் சாதனையை எட்டிய காந்தாரா

கன்னட சினிமாவில் உருவாகி இன்று இந்தியா முழுவதும் பல மொழிகளில் டப் ஆகி வெளியாகி வரும் காந்தாரா திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலில் இணைந்துள்ளது.

கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான காந்தாரா திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் குவித்து வருகிறது.

மொழி தாண்டியும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சப்டைட்டில் வசதியோடு இந்த படம் ஓடி வருகிறது. பொன்னியின் செல்வனுக்கு பிறகு ரசிகர்கள் ஆவலாகப் பார்க்கும் படமாக காந்தாரா அமைந்துள்ளது.

இந்நிலையில் இப்போது ஐஎம்டிபி ரேட்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 9.5 மதிப்பெண்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் ஜெய்பீம் திரைப்படம் 8.9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், KGF 2 திரைப்படம் 8.4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. 

இதற்கிடையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. கன்னட சினிமாவில் இந்த மைல்கல்லை எட்டும் 6 ஆவது திரைப்படமாக காந்தாரா அமைந்துள்ளது. கேஜிஎப், கேஜிஎப்2, விக்ராந்த் ரோனா, ஜேம்ஸ், சார்லி 777 ஆகிய படங்களுக்கு பிறகு இந்த பட்டியலில் காந்தாரா இணைந்துள்ளது.