திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 19 ஏப்ரல் 2018 (13:49 IST)

ஐபிஎல் போல் சினிமாவையும் எதிர்ப்பீர்களா?: ஆர்.ஜே பாலாஜி

ஐபிஎல் போட்டி கடந்த 10ஆம் தேதி சென்னையில் நடைபெற்றபோது திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் ஒரு சில லட்டர்பேட் கட்சிகளும், ஓய்வுபெற்றதிரையுலகினர் சிலரும் விளம்பரத்திற்காக போராட்டம் செய்தனர். தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிட்டது போல் அதே போராட்டக்காரர்கள் அமைதியாகிவிட்டது ஏன் என்பதும் புரியாத மர்மமாக உள்ளது
 
இந்த நிலையில் நேற்று உதயநிதி தனது டுவிட்டரில் ஐபில் போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே.. என்று கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் தற்போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் உதயநிதியின் கேட்ட அதே கேள்வியை கேட்டுள்ளார். அவர் தனது முகநூலில் சினிமா உலகினர்களின் வேலை நிறுத்தத்துக்குப் பிறகு நிறைய நல்ல மாற்றங்களுடன் சினிமாத்துறை மறுபடியும் வந்துள்ளது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான தினசரி சம்பளக்காரர்கள், தன்னுடயை குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தை உரிய நேரத்தில் கட்ட முடியும். இந்த நல்ல தீர்வை அடைவதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.
 
அதேசமயம், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை சினிமாவையும் புறக்கணிக்கக் குரல் கொடுப்பார்களா? இரண்டு தவறுகள் ஒரு நல்ல விஷயத்துக்குத் தீர்வாகாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தவறை ஏற்றுக்கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
 
47 நாள் போராட்டத்திற்கு பின்னர் நாளை புதிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சினிமாவில் உள்ளவர்களே இதுபோன்ற கருத்தை தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.