திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:57 IST)

நயன்தாரா படத்தில் இணையத்தைக் கலக்கிய ரித்விக்!

சில மாதங்களுக்கு முன்னர் யுடியுபில் வீடியோ மூலமாக கலக்கிய சிறுவன் ரித்விக்குக்கு இப்போது சினிமா வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

நயன்தாரா டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்காக நடிக்கும் படத்தை வெங்கட் பிரபுவின் உதவியாளர் விக்னேஷ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து முடிந்துள்ளத்யு. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு பேருந்துக்குள் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளதாம். அதற்காக ஒரு பேருந்தை வாங்கி சிக்கனமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் இயக்குனர். இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்துக்கு ஆக்ஸிஜன் என்பதைக் குறிக்கும் O2 என பெயர் வைத்துள்ளார்களாம். விரைவில் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் வீடியோ மூலமாக வைரலான சிறுவன் ரித்விக் நடித்துள்ளாராம். அவர் படத்தில் நயன்தாராவின் மகனாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.