பிரதமர் பதவி விலக வேண்டும்… பாகிஸ்தான் எதிர்க்கட்சி ஆவேசம்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சியான நவாஸ் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பிரதமராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் இம்ரான் கான். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் பாகிஸ்தானை முன்பு ஆண்ட நவாஸ் ஷெரிப் மற்றும் பெனாசீர் பூட்டோ ஆகியவர்கள் ஊழலில் திளைத்து நாட்டையே அழித்து விட்டனர் என்று கூறியிருந்தார்.
இதற்கு இப்போது எதிர்க்கட்சி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. அதில் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் தன் சாதனைகளை பட்டியலிட முடியாம்ல இம்ரான் கான் முந்தைய ஆட்சியாளர்களை குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவர் உடனே பதவி விலக வேண்டும் எனக் கூறியுள்ளது.