கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு! ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்டு ஷாக் கொடுத்த சின்மயி!

Last Updated: திங்கள், 20 மே 2019 (16:06 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினார். பிறகு சின்மயி சொன்னது எல்லாம் பொய் என்று வைரமுத்து மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து #metoo ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.  

 
தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.  
 
அந்தவகையில் தற்போது  பெண் ஒருவர் அதிர்ச்சியளிக்கக்கூடிய  மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது  நான் ஒரு மனோதத்துவ நிபுணரை சந்திக்க நேரில் சென்றேன். முதலில் அவர் என்னிடம் உள்ள தனிப்பட்ட விஷயங்களை கேட்டார் தான்  அதனை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றும் கூறினார். எனவே, அவரை நம்பி நான் அனைத்தையும் கூறினேன். ஒரு கட்டத்தில் அவர் என்னிடம் பல அந்தரங்க கேள்விகளை கேட்டார். நான் ஏன் இதுபோன்று கேட்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, இது அனைத்தும் சிகிச்சையின் ஒரு அங்கம்தான் என்று கூறினார்.     

 
நானும் அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன் பின்னர் அவர் திடீரென என்னிடம் "உன் கணவரை விட்டு விட்டு வேறு யாருடனாவது கள்ளத் தொடர்பு வைத்துக் கொள் யாருடனாவது தான் நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என்று கூறினார். அதை கேட்டதும்  நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன் இதுபோன்ற மருத்துவர்கள் இருப்பது மருத்துவத்துறைக்கு களங்கம்’ என்று அவர் கூறியுள்ளார். சின்மயி இதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் மேலும் படிக்கவும் :