புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (09:06 IST)

வைரமுத்து போட்ட அந்த டுவீட்: கடுப்பாகி சின்மயி செய்த வேலை!!!

ஸ்டாலின் குறித்து வைரமுத்து போட்ட டுவீட்டை பார்த்த சின்மயி அவரை கிண்டலடித்து டிவீட் போட்டுள்ளார்.
வைரமுத்து மீது சென்ற ஆண்டு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக மீடூ உருவாக பல பெண்களின் குற்றச்சாட்டுகளை சின்மயி வெளிக்கொண்டு வந்தார். சின்மயிக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்தாலும் அவர் வெறும் பப்ளிசிட்டிக்காக வைரமுத்து மீது பழி போடுகிறார் எனவும் பலர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
 
இந்நிலையில் வைரமுத்து தனது டிவிட்டரில் 
தமிழினம் மீளவும்
தமிழ்நாடு வாழவும்
தளபதி ஆளவும்
வாழ்த்துச் சொன்னேன்.. என ஸ்டாலினை சந்தித்து விட்டு டிவீட் போட்டார்.
 
இதனைப்பார்த்து விட்டு சின்மயி தனது டிவிட்டரில் சரி அதுக்கு என்னா இப்போ என டிவீட் போட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் இன்னுமா உங்க பஞ்சாயத்து தீரல என கருத்து சொல்லி வருகின்றனர்.