சின்மயி... உனக்கெல்லாம் யாரு சான்ஸ் கொடுப்பா? டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நபர்..

Last Modified வியாழன், 25 ஏப்ரல் 2019 (09:02 IST)
உங்களுக்கு யார் சான்ஸ் கொடுப்பார்கள் என நபர் ஒருவர் சின்மயியிடம் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வைரமுத்து மீது சென்ற ஆண்டு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக மீடூ உருவாக பல பெண்களின் குற்றச்சாட்டுகளை சின்மயி வெளிக்கொண்டு வந்தார். இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
 
இதற்கெதிராக நீதிமன்றத்தை நாடினார் சின்மயி. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சின்மயி மீது டப்பிங் யூனியன் விதித்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
 
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டப்பிங் யூனியன் விதித்த தடைக்கு மீண்டும்  இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் வழக்கை நீட்டித்துள்ளது . இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் எந்த இடையூருமின்றி வேலை செய்யலாம் என கூறப்படுகிறது. 
 
இதுகுறித்து நபர் ஒருவர் சின்மயியிடம் உங்களுக்கு யாரு சான்ஸ் கொடுப்பார்கள் என டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சின்மயி வேற யாரு, நம்ம தமிழ் திரையுலகம் தான். எனக்கு சான்ஸ் கொடுக்காதா? என எதிர்கேள்வி எழுப்பினார். சின்மயியின் கேள்விக்கு பதிலளித்த மற்றொரு நபர் ஒருவர் பெரிய மியூசிக் டைரக்டர்கள் சின்மயிக்கு சான்ஸ் கொடுத்தால், அதையே பலர் பின்பற்றுவர் என கூறியிருந்தார்.  
 
நிவாஸ் செய்தது போல கோவிந்த் மற்றும் ஜிப்ரான் எனக்கு சான்ஸ் கொடுத்தார்கள். இவர்கள் தான் பெரிய இசை இயக்குனர்கள் என சின்மயி பதிவிட்டுள்ளார்.
t1இதில் மேலும் படிக்கவும் :