ரஞ்சன் கோகாய்க்கு எதிராக சின்மயி ஆர்ப்பாட்டம் – காவல்துறையில் அனுமதி !

Last Modified புதன், 8 மே 2019 (14:06 IST)
உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய பாடகி சின்மயி காவல்துறையினரிடம் அனுமதி கோரியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட மீ டூ இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர் பாடகி சின்மயி. பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது புகார் அளித்ததோடு மேலும் பலர் தங்கள் புகார்களை சின்மயி மூலமாக வெளிப்படுத்தவும் உதவினார். ஆனால் வைரமுத்து மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாததும் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்காமலும் உள்ளதும் அவர் மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன.

அதன் பின்னர் பாலியல் அத்துமீறல் நிகழ்வுகள் நடக்கும் போது குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு நாட்டையே உலுக்கியுள்ளது. இதையடுத்து நீதிபதிக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார் சின்மயி. இதற்காக காவல்துறையில் அனுமதிக் கேட்டுள்ளார்இதில் மேலும் படிக்கவும் :