வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (12:04 IST)

லைகாவின் அடுத்த படத்தில் அருண்விஜய்?

கமல்ஹாசனின் 'இந்தியன் 2', மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்', சூர்யாவின் 'காப்பான்' உள்பட பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் அடுத்ததாக ஒரு த்ரில் படத்தை பெரும் பொருட்செலவில் ஹாலிவுட் பாணியில் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் 'தடம்' படத்தின் வெற்றி நாயகன் அருண்விஜய் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த படத்தை 'துருவங்கள் 16, 'நரகாசுரன்' போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார். இவர் தற்போது 'நாடக மேடை' என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்குவார் என்றும் கூறப்பட்டது
 
ஆனால் தற்போது லைகாநிறுவனத்தின் படத்திற்கு கார்த்திக் நரேன் தயாராகி வருவதாகவும், ஹாலிவுட் பாணியில் தயாராகும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இதில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது