1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:20 IST)

தேவ் டைட்டிலுக்கான காரணம் என்ன?

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி - ரகுல் இணைந்து நடித்துள்ள படம் தேவ். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று சூர்யா வெளியிட்டார். 
 
இந்த படத்திற்கு தேவ் என பெயர் வைத்தற்கு காரணம் என்னவென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கார்த்தியின் பெயர், தேவ். 
 
பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவின் தீவிர ரசிகரான இவர், தன் பெயரைத் தேவ் ராமலிங்கம் என்று மாற்றிக் கொள்கிறார். நாளடைவில் அதுவே தேவ் என சுருங்கிவிடுகிறது. 
 
இதுதான் தேவ் என்ற டைட்டில் வைத்தற்கு காரணமாம். இந்த படத்தில், கார்த்தி, ரகுல் ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். 
 
சிறப்புத் தோற்றத்தில் கார்த்திக், நிக்கி கல்ராணி இருவரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.