புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 20 அக்டோபர் 2018 (14:33 IST)

மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் தனது மகளுடன் பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடல் ஒரு மாதத்தில் 5 கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் படம் கனா. இந்த படத்தை அவரது நண்பர் அருண்ராஜா காமராஜா இயக்கியிருக்கிறார்.
 
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.  இந்த படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார்
 
இந்நிலையில் இந்த படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை தனது மகள் ஆராதனா மற்றும் பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மியுடன் இணைந்து பாடியுள்ளார் சிவகார்த்திகேயன்.
 
இந்த பாடலின் துள்ளல் இசையும், சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவின் அழகிய குரல் மற்றும் எக்ஸ்பிரசன் அனைத்து குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்தது. இதனால், இந்த பாடல் யூடியூபில் வெளியான ஒரே மாதத்தில் இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில், 
 
தந்தை, மகள் உறவை சொல்லும் இந்த பாடல், என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுக்க நினைக்க வைத்துள்ளது. இப்போது யூடியூபில் 50 மில்லியனை தாண்டியிருப்பதும், பலருக்கு  பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 
 
மேலும் பாடலை பாடிய வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு நன்றி. ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னையும், என் மகள் ஆராதனாவையும்  ஒரே பாடலில் இணைத்த இயக்குனர் அருண்ராஜா காமராஜாவுக்கு நன்றி என்றார்.