ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 அக்டோபர் 2018 (11:56 IST)

இதயத்தில் நிற்கும் அழகான படம் பரியேறும் பெருமாள் - சிவகார்த்திகேயன் பாராட்டு !

இயக்குநர் பா.ரஞ்சித்தின் முதல் தயாரிப்பாக வெளிவந்த 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் பிரபலங்கள் பலரின் பாராட்டுகளை குவித்து வருகிறது. பிரபலங்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்த இந்த திரைப்படம் ஆதிக்க சக்திகளின் கோர முகத்தை திரையில் காட்டியது. 
 
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் இத்திரைப்படத்தைப் பார்த்து தங்கள்  வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர்.அவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் படத்தை பார்த்து சிறப்பாக பாராட்டியுள்ளார்.
 
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இதயத்தில் நிலைத்து நிற்கும் திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில்  அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்" என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.