வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: சனி, 20 மே 2023 (09:06 IST)

திருமண வாழ்க்கையில் விரிசல்... ரவீந்தர் போட்ட சோகமான பதிவு!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ததை ஒருவருக்கொருவர் பணத்திற்காகவும், அழகுக்காக கல்யாணம் செய்துக்கொண்டதாக நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்தனர். 
 
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் ஜாலியாக வாழ்ந்து வந்தார்கள். யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. இப்போது இந்த ஜோடிக்கு இடையில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாம். ஆம், ரவீந்தர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்,  ' லைஃப்னா கஷ்டம்‌ இல்ல கஷ்டம் இல்லன லைஃபே இல்ல' என பதிவிட்டிருந்தார். 
 
இந்நிலையில் தற்போது வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னையை நேசிப்பதே, ஏனென்றால் அவர்கள் உங்களின் வருத்தங்களில் மட்டுமே மகிச்சியாக இருக்கிறார்கள் என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இதனால் ரவீந்தரை மகாலக்ஷ்மி தனியாக தவிக்க விட்டு சென்றுவிட்டார் போல , மனைவி மகாலட்சுமியுடன் என்ன பிரச்சனை ? என்று ஆளாளுக்கு கேட்டு வருகிறார்கள்.