1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (08:38 IST)

பொன்னியின் செல்வன் ப்ரஸ்மீட்… நானே வருவேன் படத்தை சீண்டிய பார்த்திபன்!

பொன்னியின் செல்வன் ப்ரஸ்மீட்டில் பேசும் போது பார்த்திபன் நானே வருவேன் படம் பற்றி பேசியது கவனத்தை ஈர்த்தது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நேற்று தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகும் போது நானே வருவேன் போட்டியாக ரிலீஸ் ஆனதாக ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் பேச்சுகள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று நடந்த பொன்னியின் செல்வன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய பார்த்திபன் “நானே வருவேன்… நான் நானே வருவேன்னு அடம்பிடிச்சு இன்னைக்கு இந்த ப்ரஸ் மீட்டுக்கு வந்திருக்கேன்” எனப் பேசியது நானே வருவேன் ரிலீஸை மறைமுகமாக கேலி செய்வது போல அமைந்தது.