வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (08:46 IST)

பொன்னியின் செல்வன்: வைரமுத்து ஏன் இல்லை… மீண்டும் விளக்கம் அளித்த மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தில் தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியான ஏ ஆர் ரஹ்மான் – மணிரத்னம் – வைரமுத்து கூட்டணி பிரிந்துள்ளது.

ரோஜா திரைப்படத்துக்கு பிறகு முதல் முறையாக இயக்குனர் மணிரத்னம் வைரமுத்து பாடல் எழுதாமல் இயக்கியுள்ளார். இதற்கு வைரமுத்து மீது எழுந்த மீ டு குற்றச்சாட்டுகளே காரணம் என்று கிசுகிசுக்கள் எழுந்தன. இந்நிலையில் இதைப் பற்றி இயக்குனர் மணிரத்னத்திடம் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.

அப்போது மணிரத்னம் “வைரமுத்துவோடு ஏற்கனவே பல படங்களில் பணியாற்றிவிட்டோம். அவரின் பல கவிதைகளை ரஹ்மானோடு இணைந்து பாடல்கள் ஆக்கியுள்ளோம். அவை எல்லாமே ஹிட் ஆகின. புதிய திறமையாளர்களோடு ஒரு படம் பண்ணலாம் என்றுதான் இந்த முடிவு” எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் மீண்டும் அந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “வைரமுத்துவோடு பணியாற்றினாலும் மற்ற கவிஞர்களோடு பணியாற்றினாலும் ஒரே அளவு உழைப்பைதான் போடுகிறோம். நிறைய திறமையான தமிழ்க் கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு பணியாற்றுவது மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.