ராஷ்மிகாவை ரொம்ப கஷ்டப்படுத்தும் டிரெயினர்… அவரே வெளியிட்ட வீடியோ!
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.
இதற்கிடையில் ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றதாக தகவல்கள் பரவின.
ஆனால் தன்னைப் பற்றி வரும் கிசுகிசு பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் பாட்டுக்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது ஜிம்மில் அவர் கடினமான உடல் பயிற்சிகளை செய்யும் வீடியோவை வெளியிட அது வைரல் ஆகி வருகிறது.