புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (15:40 IST)

அச்சச்கோ..! கண்ணை மூடிக்கோங்க - வைரலாகும் ராஷி கண்ணாவின் ஓவர் கிளாமர்!

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது கோலிவுட்டின் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் "சங்கத் தமிழன்",  ‘கடைசி விவசாயி’  போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.


 
இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் காபே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி,மலையாளம் என்று அத்தனை மொழி படங்களிலும் நடித்து ஆல் ரவுண்டு வருகிறார்.  டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் நடித்ததெல்லாம் ஹிட் என்ற அளவிற்கு ராசியான நடிகையாகிவிட்டார் ராஷி கண்ணா. 
 
கவர்ச்சிக்கு கேட் போட்டு பார்த்து பார்த்து நடித்து வந்த அம்மணி சமீபகாலமாக அடிக்கடி கவர்ச்சிக்கு தாராளம் காட்டி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் மேலாடை அணிந்து உள்ளாடையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காண்பித்து படுமோசமான கிளாமரில் போஸ் கொடுத்துள்ளார். 
 
இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக்காகி விட்டனர். மேலும் அவரது தீவிர ரசிகர்கள்,  "கவர்ச்சி காட்டுங்க வேண்டாம்னு சொல்லல அதுக்குன்னு இப்படியா பண்ணுவீங்க" என வருத்தப்பட்டு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.