புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (16:42 IST)

"மதுமிதாவுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது" - வஞ்சம் வைத்து பகை தீர்த்தாரா சாண்டி!

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என ப்ரோமோ வீடியோவை பார்க்கும்போதே தெரிகிறது. 


 
காலையில் இருந்து சண்டையில் ஆரம்பித்த பிக்பாஸ் தற்போது ரணகளத்தில் முடிந்துள்ளது. ஆம், இன்றைய களுக்கான மூன்றாவது ப்ரோமோ  வீடியோவில் பனிச்சறுக்கு டாஸ்க் கொடுக்கின்றனர். இதில் சாண்டி , மதுமிதா முகன் என மூன்று பெரும் கலந்துகொண்டு விளையாடி கொண்டிருக்கும்போதே மதுமிதா பேலன்ஸ் செய்யமுடியாமல் கீழே விழுந்துவிட்டார். பின்னர் மூக்கு உடைந்து அவருக்கு ரத்தமே வந்துவிட்டது. 
 
இதனை கண்ட நெட்டிசன்ஸ் போன வாரம் சில்லி பேஸ்ட் முகத்தில் தடவிக்கொண்டு டான்ஸ் ஆடவேண்டும் என கொடுக்கப்பட்ட டாஸ்கில் தன்னை கிண்டலடித்த சாண்டியை மதுமிதா திட்டி சண்டையிட்டார். தற்போது அதனை மனதில் வைத்துக்கொண்டு சாண்டி பழி தீர்த்துவிட்டாரா என கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.