போதும் இதோட நிறுத்திக்கோங்க: நெட்டிசன்களிடம் ரம்யா பாண்டியன் வேண்டுகோள்

நெட்டிசன்களிடம் ரம்யா பாண்டியன் வேண்டுகோள்
siva| Last Modified ஞாயிறு, 24 ஜனவரி 2021 (11:23 IST)
நெட்டிசன்களிடம் ரம்யா பாண்டியன் வேண்டுகோள்
தன்னை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வரும் நெட்டிசன்கள் மற்றும் ஆரி ரசிகர்களுக்கு, ‘போதும் தயவுசெய்து இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’ என ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் முதல் 50 நாட்கள் வரை நடுநிலைமையுடன் இருந்ததாக தெரிந்தது. அதன் பின்னர் அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஆரிக்கு எதிராகவும் பாலாஜிக்கு ஆதரவாகவும் விளையாடத் தொடங்கினார். ஒருகட்டத்தில் அவர் நேருக்கு நேராக ஆரியை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆரியை விமர்சனம் செய்தவர் யாராக இருந்தாலும் நெட்டிசன்கள் வச்சு செய்வார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ரம்யா பாண்டியனையும் விட்டுவைக்கவில்லை இருப்பினும் ஆரி ஆதரவாளர்களால் ரம்யா பாண்டியனை வெளியேற்ற முடியவில்லை என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் தன்னை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நெட்டிசன்களுக்கு ரம்யா பாண்டியன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டது. அதனால் பிக்பாஸ் போட்டியாளர்களை குறிப்பாக பெண் போட்டியாளர்களை விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். நம்முடைய அடிப்படை கலாச்சாரமே பெண்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பதுதான் என்று கூறியுள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :