கே எஸ் ரவிக்குமாரோடு கைகோர்க்கும் பிக்பாஸ் தர்ஷன் - எந்த படத்தில் தெரியுமா?

Last Modified சனி, 23 ஜனவரி 2021 (16:30 IST)

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் எனும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் வாங்கியுள்ளார்.

மலையாள சினிமாவில் கதையம்சம் உள்ள பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த வகையில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்.

திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன. அந்த வகையில் இப்போது தமிழில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கே எஸ் ரவிக்குமார் வாங்கியுள்ளார். இந்த படத்தில் அவரே ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவரது உதவியாளர் இயக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்போது அந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் தர்ஷன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :