திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 27 நவம்பர் 2021 (17:37 IST)

பிக் பாஸ் தொகுப்பாளர் யார்? கமலே வந்து கொடுத்த சர்ப்ரைஸ்!!

விஜய் டிவி அதிகாரபூர்வமாக யாரையும் சொல்லமல் இருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசனுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு பதில் வேறு யாராவது இந்த வாரம் முதல் ஒரு சில வாரங்களுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்பட்டது. 
 
முதலில் ஸ்ருதி ஹாசன், சிம்பு, விஜய் சேதுபதி ஆகிய பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது ரம்யாகிருஷ்ணன் இந்த வாரம் முதல் தொகுத்து வழங்குவார் என்று வேகமாக ஒரு வதந்தி பரவியது.  ஆனால் விஜய் டிவி அதிகாரபூர்வமாக யாரையும் சொல்லமல் இருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ வெளியாகியுள்ளது.
 
கமல் ஹாசன் மருத்துவமனையில் இருந்த படி நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என அறிவித்து அவரை அறிமுகம் செய்து வைக்கிறார். நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த வருடம் தெலுங்கு பிக் பாஸை ஒரு சில எபிசோடுகளுக்கு நகர்ஜுனாவுக்கு பதிலாக தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.