1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (16:33 IST)

கமல்ஹாசனுக்கு பதில் ரம்யா கிருஷ்ணனா? வேகமாக பரவி வரும் பிக்பாஸ் வதந்தி!

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசனுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு பதில் வேறு யாராவது இந்த வாரம் முதல் ஒரு சில வாரங்களுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்பட்டது
 
முதலில் ஸ்ருதி ஹாசன், சிம்பு, விஜய் சேதுபதி ஆகிய பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது ரம்யாகிருஷ்ணன் இந்த வாரம் முதல் தொகுத்து வழங்குவார் என்று வேகமாக ஒரு வதந்தி பரவி வருகிறது 
 
ஆனால் விஜய் டிவி அதிகாரபூர்வமாக இன்னும் கமல்ஹாசனுக்கு பதில் யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பது குறித்தும் அல்லது கமல்ஹாசனே மருத்துவமனையிலிருந்து தொகுத்து வழங்குவாரா என்பது குறித்தும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
நாளை மறுநாள் கமல்ஹாசன் நிகழ்ச்சி வரவிருக்கும் நிலையில் நாளை விஜய் டிவி இது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.