1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (15:37 IST)

23 வருடங்களுக்குப் பிறகு ரஜினி படத்தில் இணையும் ‘படையப்பா’ நடிகை?... தீயா இருக்குமே காம்பினேஷன்!

ரஜினி அடுத்து நடிக்கும் நெல்சன் படத்தில் இணைய உள்ள நடிகர் நடிகைகள் பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு அதன் இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் தற்போது எழுந்தன. இதனால் அவர் அடுத்து இயக்கவுள்ள ரஜினி படத்தில் மாற்றங்கள் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி ரஜினியிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனரை மாற்றலாமா என அவரிடமே கேட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக ரஜினி காத்திருக்கும் நிலையில் தோல்விப் படம் தந்த நெல்சனையே இயக்க சொல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெல்சன் ரஜினி கூட்டணி உறுதியானது.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியோடு நடிக்கப் போகும் நடிகர்கள் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராய் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் இருவர் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதன் பின்னர் பாபா படத்தில் ஒரு சிறு வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.