1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (09:54 IST)

ET, டான் படங்களுக்குப் பிறகு பிரியங்கா மோகனின் அடுத்த படம்… வெளியான செம்ம அப்டேட்!

தமிழில் டாக்டர் படம் மூலம் அறிமுகமான பிரியங்கா அருள் மோகன் அதைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

டாக்டர் படத்தின் வெற்றியில் நடிகை பிரியங்கா மோகனின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் அடுத்து ரஜினி படத்தை இயக்க உள்ள நிலையில் அந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிகக் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அவர் ஜெயம் ரவி – எம் ராஜேஷ் கூட்டணியில் அடுத்து உருவாக உள்ள புதிய பெயரிடப்படாத படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.