வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (11:58 IST)

பிக்பாஸ் வீட்ல என்னடா பண்ண! மகத்தை புரட்டி எடுக்கும் ரம்யா - வைரல் வீடியோ

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர் மகத்தை, ஏற்கனவே அந்நிகழ்ச்ச்சியிலிருந்து வெளியேறிய பாடகி ரம்யா அடித்து துவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

 
பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற மகத் பெண்களிடம் குறிப்பாக ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் அதிக நெருக்கம் காட்டினார். யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா படுக்கை அறையில் படுத்துக்கொண்டு அவர் அடித்த லூட்டிகள் புகைப்படமாக வெளிவந்தன. 
 
அதோடு, யாஷிகாவின் உடலில் மகத் கை வைத்திருந்த சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பலரையும்  முகம் சுளிக்க வைத்தன. பிக்பாஸ் வீட்டிலிருக்கும் பெண் போட்டியாளர்களிடம் மகத் வரம்பு மீறி செயல்படுவதாக டேனியல் பாலாஜியும் ஏற்கனவே கூறியிருந்தார். மேலும், மும்தாஜிடம் அவர் அதிகமாக சண்டையிட்டதால், அவரை ரெட் கார்டு காட்டி கமல்ஹாசன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினார்.

 
இந்நிலையில், மகத்தை ஏற்கனவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பாடகி ரம்யா ஒரு கட்டையால் அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ‘சொல்லுடா.. பிக்பாஸ் வீட்ல என்னடா பண்ண’ என ரம்யா அடிக்க.. ‘பிக்பாஸ் காப்பாற்றுங்கள். ஐ மிஸ் யு மும்தாஜ்’ என மகத் கத்துகிறார். ரம்யா செல்லமாகத்தான் அடிக்கிறார் என்றாலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே மகத்தை சிம்பு கன்னத்தில் அடிக்கும் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.