திங்கள், 9 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஜூலை 2024 (14:32 IST)

கணவர், குழந்தைகளுடன் தளபதி விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை ரம்பா, தளபதி விஜய் உடன் ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில் இன்று அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விஜய்யை சந்தித்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
மின்சார கண்ணா, என்றென்றும் காதல், நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட சில படங்களில் விஜய் மற்றும் ரம்பா ஜோடியாக நடித்திருந்தனர் என்பதும் இந்த ஜோடி க்யூட்டாக இருப்பதாக அப்போதே ரசிகர்கள் கருத்து தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நடிகை ரம்பா கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின், திரையுலகில் இருந்து விலகினார். அதன் பிறகு அடுத்தடுத்து அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார் என்பதும் அவ்வப்போது மட்டும் இந்தியாவுக்கு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் தளபதி விஜய்யை தனது குடும்பத்துடன் சந்தித்ததாக ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. 
 
Edited by Mahendran