க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோ ஆல்பம்!
கீர்த்தி ஷெட்டி அறிமுகமான உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் பெற்றவர் கீர்த்தி ஷெட்டி. அந்த ஒரு படத்திலேயே தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் நடித்த வாரியர் திரைப்படமும் தமிழில் ரிலீஸாகி கவனம் பெற்றது.
சூர்யாவின் வணங்கான் படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் படத்தில் இருந்து சூர்யா வெளியேறிவிட்ட நிலையில் இப்போது இவரும் வெளியேறியுள்ளார். அதனால் தமிழில் நல்ல அறிமுகத்துக்காக காத்திருக்கிறார்.
இப்போது ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இன்ஸ்டாகிராம் மூலமாக தமிழ் ரசிகர்களைக் கவர்ந்து வரும் அவர் இப்போது கருப்பு நிற உடையணிந்து வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.