வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (13:48 IST)

நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்..!

தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் தனுஷுக்கு ரெட் கார்டு விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சல் பட தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியின் படம் ஒன்றில் நடித்து 80 சதவீத படப்பிடிப்பு முடிந்தபின் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகவும், பைவ் ஸ்டார் கதிரேசனிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு படமும் நடித்து தராமல், அட்வான்ஸையும் திரும்ப தராமல் இழுத்தடித்ததாகவும் எழுந்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து நடிகர் சங்கம் தனுஷ் சார்பாகப் பேசி தயாரிப்பாளர் சங்கம் தனுஷ் மேல் விதித்திருந்த ரெட் கார்டை நீக்கியது. தனுஷ் மெர்சல் தயாரிப்பாளருக்கு வேறொரு படம் நடித்துக் கொடுப்பது மற்றும் பைவ் ஸ்டார் கதிரேசனிடம் வாங்கிய அட்வான்ஸை வட்டியுடன் திரும்ப தருவது உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு தனுஷ் ஒத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தனுஷ் இயக்கி நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

இந்நிலையில் தன் சார்பாக பேசி பிரச்சனையைத் தீர்த்துக் கொடுத்த நடிகர் சங்கத்துக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். அதில் “நடிகர் சங்கத்தின் உதவி எங்களுக்கு மட்டுமில்லாமல் தொழில்துறைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.உங்கள் உதவியால் படப்பிடிப்பை மீண்டும் நல்ல விதமாக தொடங்க முடிந்தது” எனக் கூறியுள்ளார்.