வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 20 ஜூன் 2024 (14:22 IST)

தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு "வாதளபதிவா" என்ற தலைப்பில் பாடல் வெளியீடு!

தளபதி விஜய்  கோடான கோடி ரசிகர்களில் ஒருவரான, இசையமைப்பாளர் சதீஷ் நாதனின் இசையில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21.6.2024 அன்று மாலை 6 மணி அளவில் ஒரு ரசிகனின் கனவாக #வாதளபதிவா என்ற தலைப்பில்  பாடல் வெளியாக உள்ளது.
 
இது குறித்து பேசிய இசையமைப்பாளர் ப சதீஷ் நாதன்....
 
இப்பாடலை தளபதியின் கடின உழைப்பு வெற்றி ரசிகர்கள் அரவணைப்பும் என்னையும் இணைத்து கோடான கோடி ரசிகர்களுக்கு இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன் என்றார்.
 
இப்பாடலை திரைப்பட பாடலாசிரியர் கருணாகரன் எழுதியிருக்கிறார்,
மற்றும் திரைப்பட பாடகர், வேலு மற்றும் தீத்யா , பவன் குழுவினர்கள் இப்பாடலை பாடி உள்ளனர்
 
வரும் 21ஆம் தேதி அன்று திரை பிரபலங்கள் இப்பாடலில் தனது சமூக வலைதளத்தில் பகிரவும் உள்ளனர்.