ஸ்டார்களின் விவாகரத்து ட்ரெண்ட் செட்டர்கள் - ராம் கோபால் வர்மா
நட்சத்திரங்களின் விவாகரத்துகள் திருமணத்தின் ஆபத்துகளை உணர்த்தும் ட்ரெண்ட் செட்டர்கள் என இயக்குநர் ராம் கோபால் வர்மா பதிவு.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு, நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இது ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களிடையேயும், சினிமா உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, நட்சத்திரங்களின் விவாகரத்துகள் திருமணத்தின் ஆபத்துகளைப் பற்றி இளைஞர்களை எச்சரிக்கும் நல்ல ட்ரெண்ட் செட்டர்கள் என விவாகரத்துகளை ஆதரிப்பது போல் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் தான் நடிகர் நாக் சைதன்யாவும் நடிகை சமந்தாவும் விவாகரத்தை அறிவித்தனர். தற்போது சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, தனது கணவரை விவாகத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.