வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (17:24 IST)

இந்த வருஷம் ரகுல் பிரீத் சிங் காட்டில் மழை!

கடந்த வருடம்  ரகுல் பிரீத் சிங் டோலிவுட்டில் ஒரு படத்தில் கூட ஹீரோயினாக நடிக்கவில்லை. தெலுங்கில் எந்த பெரிய நடிகருடன்  அவருக்கு படம் அமையவில்லை.


 
இந்நிலையில் என்டிஆரின் பயோகிராபியல் ஸ்ரீதேவி வேடத்தில் நடித்திருந்தார். இதனால் தெலுங்கில் அவருக்கு மார்க்கெட் போய்விட்டதா என கேள்வி எழுந்தது.
 
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரகுல் பிரீத் சிங், என்னை இந்த வருடம் ஐந்து படங்களில் பார்ப்பீர்கள். தேவ் இப்போது வெளியாகி உள்ளது. விரைவில் என்ஜிகே வெளியாகும் என்றார். இதுதவிர வெங்கிமாமா என்ற படத்தில் நாகசைத்னயாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.



இது தவிர இரண்டு பாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். எனவே இந்த ஆண்டு  ஐந்து படங்களில் ரகுல் பிரீத் சிங்கை பார்க்க முடியும்.