செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:03 IST)

'தேவ்' படம் எப்படி இருக்கு? ட்விட்டர் வாசிகளின் கருத்து இதோ!

ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி,  ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள தேவ் படத்தின் படத்தை பற்றின ரசிகர்களின் டுவிட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். 


 
புதுமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள  தேவ் படம் காதலர் தினமான இன்று ரிலீஸாகியுள்ளது. 
 
தேவ் படம் இரண்டாம் பாதி முழு முழுக்க காதலை உள்ளடக்கியுள்ளது. "ஒரு முறை" பாடல் சிம்புவின் "அவளும் நானும் பாடலை போன்ற ஒரு அற்புதமான சாலை பயண பாடல்! 


 
ராகுல் ப்ரீத் சிங்கின் கதாபாத்திரம் ரொம்ப கச்சிதமா இருக்கு.  குணசித்திர கதாபாத்திரங்கள் உறவுகளுக்கான முக்கியத்துவத்தை காட்டுகிறது. 


 
ரகுல் ப்ரீத் ஒ.கே, ஆர்.ஜே விக்னேஷ் மொக்க காமெடி , ஹாரிஸ் ஒரே மாதிரியான மியூசிக் டெம்ப்ளேட் கொடுத்திருக்காரு..


 
அனைவருக்கும் தேவ் படம் பிடிக்கும் என நம்புகிறேன் என்று நாயகி ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

 
தேவ் படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் கேட்பது கார்த்தியின் தோழியாக நடித்திருக்கும் அந்த பெண் யார் என்று தான். 


 
இவர் கார்த்தியின் ரசிகராக இருந்தும் படத்திற்கு எதிர்மறையான கருத்தை தெரிவித்துள்ளார்.