வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (11:46 IST)

பாலிவுட் ட்ரீம் நடிகருடன் டூயட் பாடும் ரகுல் ப்ரீத் சிங்..!

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் 
 
இவர் தற்போது, நடிகர் சூர்யாவின் ‘என்.ஜி.கே', கார்த்தியுடன் ‘தேவ்', சிவகார்த்திகேயனின் பெயரிடப்படாத சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், ஒரு இந்தி படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் ரகுல்.
 
‘மர்ஜாவான்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் மிலப் ஜாவேரி இயக்கவுள்ளார். 
 
இந்த படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளாராம். இவர்களுடன் ரித்தேஷ் தேஷ்முக், தாரா சுடரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 
 
ஆக்‌ஷன் த்ரில்லர் களத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படபிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்குவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.